சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 56 வயது நபர் தூக்கிட்டுத் தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசார் தேடியதால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுப்பிரமணியன் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த 56 வயதான ராமமூர்த்தி என்ற அந்த நபர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரது ஊர் பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.






