வயரில் நின்று பரிதவித்த குட்டியை மீட்ட தாய்க்குரங்கு!
வட இந்தியாவில் மின்சார ரயிலில் சிக்கி பரிதவித்த குட்டியை தாய் குரங்கு மீட்டு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. வனத்துறை அதிகாரி பர்வீன் பஸ்வான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் அனுமன் மந்தி வகையை சேர்ந்த குட்டி குரங்கு மின்சார வயரில் பாதியில் நின்று அங்கிருந்து நகர முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் உயிர் பயம் அதிகரிக்க கூச்சலிட்ட குட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் குரங்கு அதற்கு வழிகாட்டியது. ஆனாலும் குட்டி வர மறுக்க ஒரு கட்டத்தில் தானே குட்டியை பிடித்து மறுபுறம் ஓட்டம் பிடித்தது தாய். வீடியோ எப்போது எங்கே பதிவானது என்ற விவரத்தை வனத்துறை அதிகாரி பதிவிடவில்லை.






