அதிவேகத்தில் சென்ற போர் விமானம்…நூலிழையில் விபத்து தவிர்ப்பு!
அமெரிக்காவில் சாகச நிகழ்ச்சியின் போது வேகம் காரணமாக விமானம் ஒன்று திசைமாறி சென்ற நிகழ்வு அரங்கேறியது. தெற்கு கலிபோர்னியாவில் அந்நாட்டின் விமானப்படையில் சாகச நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தண்டர் பேட் வகையை சேர்ந்த 6 விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது குழுவில் இருந்த விமானம் ஒன்றின் வேகம் அதிகமாக இருந்ததால் முன்னே சென்ற விமானத்துடன் மோதும் நிலை உண்டானது. இதையடுத்து குழுவின் அதிகாரிகள் உத்தரவுப்படி ஒரு விமானம் திசை மாறி செலுத்தப்பட்டது. பின்னர் வேகம் கட்டுப்படுத்தப்பட்ட பின் மற்ற விமானங்களுடன் இணைந்து பறக்க தொடங்கியது.






