திருப்புவனத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக, வாரச்சந்தையை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுமார் 20 ஆயிரம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் உணவு தேவைக்காக காய்கறிகள் வாங்க மளிகை கடைகளை அணுக வேண்டியிருந்தது.
இதனால் தங்களுக்கு ஒரு வாரச் சந்தை அமைத்து தர மாவட்ட ஆட்சியர் இடம் சமூக ஆர்வலர் அயோத்தி அவர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் திருப்புவனம் சேது நகரில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பில் வாரச் சந்தை அமைக்க இடம் ஒதுக்கி அனுமதி அளித்தார்.

இதன் அடிப்படையில் இன்று இந்த வாரச் சந்தையை காதி, கதர் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர் உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் தேமுதிக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 144 தடை உத்தரவிற்கு பிறகு வார சந்தை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






