கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்
வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரொனா வைரசுக்கான தடுப்பூசி உற்பத்தியை ரஷ்யா தொடங்கும் என்று அந்நாட்டின் தொற்று நோய் ஆராய்ச்சி மைய தலைவருமான அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக ரஷ்ய தலைதொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர் தடுப்பூசி தயாரிக்க முடிந்த போதிலும் அனைத்து ரஷ்யர்களுக்கும் உடனடியாக அதை போட முடியாது என்று கூறினார்.
ரஷ்யாவில் கொரொனாவால் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,537 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.






