--- --:--:-- --

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு!

3

ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த முறையை விட இரு மடங்கு அதிகமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படுகின்றன.

 

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹாஸ்டல் மாணவர்களைப் பொருத்தவரை நான்கு நாட்களுக்கு முன்னரே வரவழைக்கப்படுவார்கள்.

அருகாமை மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு அதன் மூலம் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு தமிழகம் அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள 65 மாணவர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக மேற்கொள்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon