--- --:--:-- --

ரோட்வைலர் நாய் கடித்ததில் தலையில் படுகாயமுற்ற சிறுவன்! உயிருக்குப் போராடும் சிறுவன்..!

11

சென்னையில் விலை உயர்ந்த ரோட்வைலர் நாய் கடித்து குதறியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான். ஆவடி அருகே முறை பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வளர்த்துவரும் ரோட்வைலர் என்ற வெளிநாட்டு நாய் சிறுவனை கடித்து குதறியது.

 

இதில் தலையில் படுகாயமுற்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களை அழைத்து செல்லும்போது வாய் கவசமிட்டு அழைத்துச் செல்வது வழக்கம். மேலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உரிமத்துடன் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon