கத்தாரில் மாஸ்க் கட்டாயம், மீறினால் ரூ.41.70 லட்சம் அபராதம்..!
உலகையே புரட்டி எடுத்த வரும் கொரொனா நோய்தொற்றுக்கு அஞ்சி ஒவ்வொரு நாட்டிலும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் தொகை 138 கோடியை கடந்த நம் நாட்டில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அந்த நூறு ரூபாய் வசூலைப்பதே மக்களை நோய்களில் இருந்து காப்பதற்கும் முன்னெச்சரிக்கையாக கவசம் அணிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை உணராமல் முக கவசம் வாங்கக்கூட பணம் இல்லை என்று விமர்சனம் செய்வதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசின் அறிவுறுத்தலுக்கு பின்னும் பலர் மாஸ்க் அணிவது இல்லை.
அபராதம் கேட்டால் வம்பு செய்வதும் தொடர்கிறது. இந்த நிலையில் 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அரபு நாடான கத்தார் நாட்டின் அரசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனா பரவலை தடுக்க மெகா அபராத முறையை கையில் எடுத்துள்ளது.
கத்தாரில் இதுவரை 28 ஆயிரம் பேரின் ஆயிரம் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,733 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறது அரசு. அதன்படி கத்தாரில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முக கவசம் இன்றி வீட்டில் இருந்து வெளியே வரும் நபருக்கு அபராதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்41 லட்சத்து 70 ஆயிரத்து 677 ரூபாய் 50 காசுகள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கத்தாரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அப்படியிருக்க அவர்கள் முக கவசம் அணிந்து வெளியே சென்று சிக்கினால் வாழ்நாளில் அவர்கள் சம்பாதித்த மொத்த தொகையையும் ஓட்டுக்காக அபராதமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கே சம்பளம் மட்டும்அதிகமில்லை அபராதமும் அதிகம்தான். மாஸ்க் அணிந்து கொரொனா பரவுதலை தடுக்கும் அபராதம் கட்டாமல் சம்பாதித்ததை காப்போம்.






