13% ஊழியர்களை நீக்க ஜோமாட்டோ நிறுவனம் முடிவு!
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ வரும் ஜூன் மாதம் முதல் 13 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு எடுத்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தீப்பந்தர்கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 50% வரை ஊதியத்தில் பிடித்தம் செய்ய உள்ளதாக ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பணியில் தக்க வைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியிடம் இருந்து விரைவில் ஈமெயில் வரும் என தெரிவித்துள்ள அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு 50 சதவீத ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் ஊழியர்கள் புதிய வேலை தேடும் பணியில் ஈடுபடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.






