சீன அதிபருடன் தற்போது பேச விரும்பவில்லை
வர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனாவுடன், அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை என்ற தகவலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தை சீர்குலைக்க வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் கையெழுத்தானது.
இந்த நிலையில் சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவியதாகக் கருதப்படும் கொரொனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ளது. நோய் தொற்றால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சீனாவுடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித்ததுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் தற்போது பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






