--- --:--:-- --

பொள்ளாச்சி அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற தாயும்,இரு மகள்களும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்! ஆனைமலை போலீசார் விசாரணை !!!

11.3

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள்.இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மூத்த மகள் சந்தியா(18) பன்னிரண்டாம் வகுப்பும், இளையமகள் சத்தியா(15) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இவர்கள் மூவரும் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இன்று ஆனைமலை ஆழியாறு ஆற்றங்கரையில் துணி துவைக்க சென்றுள்ளனர்.அப்போது, சந்தியா குளிக்கச்சென்றுள்ளார்.

அப்போது,ஆழமான பகுதிக்கு சந்தியா சென்றுள்ளார்.நீரில் மூழ்கியதை கண்டு அவரை காப்பாற்ற சத்தியா சென்றுள்ளார். அவரும் நீரில் மூழ்கியதை கண்டு பதறி அடித்த தாய் கண்ணம்மாவும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த ஆனைமலை போலீசார் நீண்ட நேரம் போராடி மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தண்ணீரில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon