கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது!

கொரொனா வைரஸ் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது. கொரொனா ,சீன வைரஸ் இல்லை என சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும் கொரொனா வைரஸ் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே வந்ததா என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன .

 

இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.மனிதனால் உருவாக்கப்பட்டவை வைரசாக கொரொனா உள்ளது என்றும் இது இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தங்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் இந்த நோயால் முதியவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply