சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்மய நகர் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அவருக்கு நோய் தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த நபர் இன்று அதிகாலை திடீரென்று மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய தலைமறைவாகியுள்ளார். தப்பியோடிய நபரின் முகவரியை கொண்ட போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.