--- --:--:-- --

பெங்களூர் தாதா முத்தப்பா ராய் மூளை புற்றுநோயால் காலமானார்!

3.1

பெங்களூருவில் நிழல் உலக தாதாவாக இருந்து திருந்தி வாழ்ந்து வந்த முத்தப்பா ராய் மூளை புற்றுநோயால் மருத்துவமனையில் காலமானார். தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிறந்த முத்தப்பா ராய் 1980களில் பெங்களூருவில் தாதாவாக வலம்வந்தார்.

 

பல்வேறு வழக்குகள் இவர் மீது இருந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். 2012ஆம் ஆண்டு இவரை துபாயில் கைது செய்து கொண்டு வந்து சிபிஐ உளவுத்துறை, கர்நாடக காவல் துறையினர் இணைந்து விசாரித்தனர். குற்றச்சாட்டுகளுக்கு சான்று இல்லை எனக்கூறி அவர் விடுவிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர் மனம் திருந்திய அவர் ஜெய கர்நாடகா எனும் பெயரில் அறக்கட்டளையை தொடங்கி நற்பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஓராண்டாக மூளை புற்றுநோயால் துன்புற்று வந்த இவர் மணிப்பால் மருத்துவமனையில் காலமானார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon