--- --:--:-- --

மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல்!

2

ஆப்கன் தலைநகர் காபூலில் மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் உயிரிழந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தன்னார்வல பெண்கள் பாலூட்டினர். கடந்த 12ஆம் தேதி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

 

சர்வதேச மனித அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்ட தாகும். தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon