--- --:--:-- --

கார் ஏற்றி கொன்ற மனைவி..! செல்போன் வாக்குமூலத்தால் சிக்கிய கள்ளக்காதலன்!

5.1

விழுப்புரம் அடுத்த காட்டேரி குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சொந்தமான தன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் புவனேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

 

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பதினான்காம் தேதி அன்று புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற இன்டிகா கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கந்தசாமி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

விபத்தில் பலியானதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய் தனது மகன் தன்னிடம் செல்போனில் அளித்த மரண வாக்குமூலம் என்று பத்து நிமிட ஆடியோவை கொடுத்துள்ளார். அந்த ஆடியோ விபத்து நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு தனது மனைவியின் சகோதரனும், மனைவியுடன் நெருக்கமாக பழகி வரும் ஓட்டுநர் ஸ்ரீதர் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும் தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் தனது மனைவி புவனேஸ்வரியும், அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் தான் காரணம் என்பதையும் விரிவாக குறிப்பிட்டு இருந்தார்.

 

இதையடுத்து கந்தசாமியின் உயிரிழப்புக்கு காரணமான இண்டிகா கார் ஓட்டுனர் பிரவீன் குமாரை பிடித்து விசாரித்த போது அவர் விபத்துக்குப் பின்னர் ஓட்டுநர் ஸ்ரீதரன் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீதரை பிடித்து விசாரித்தபோது கந்தசாமி கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழ தொடங்கின.

தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கூலிங்கிளாஸ் உடன் வீட்டிற்கு விதவிதமான தின்பண்டங்களையும் புவனேஸ்வரிக்கு பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை கவர்ந்துள்ளார் ஸ்ரீதர். இதனால் அவருடன் புவனேஸ்வரிக்கு முறையற்ற காதல் உருவாக்கியுள்ளது.

 

தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார் புவனேஸ்வரி. தனது மனைவியின் தவறான நடவடிக்கையை கந்தசாமி கண்டித்துள்ளார். இதனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் புவனேஸ்வரி பக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு அடிப்பதாக சகோதரரிடம் கூறியுள்ளார்.

 

இதனால் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வரச் சென்ற கந்தசாமியை புவனேஸ்வரியின் சகோதரர் அடித்து விரட்டினார். கூட்டாளியால் தனது வாழ்க்கை வீதிக்கு வந்துவிட்டது என்று விரக்தி அடைந்த கந்தசாமி தனது மனைவியை எப்படியும் தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

 

அதே நேரத்தில் கந்தசாமி உயிரோடு இருந்தால் முறையற்ற காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்று ஸ்ரீதரும் புவனேஸ்வரியும் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். கார் மோதினால் விபத்து என்று நினைத்து விடுவார்கள் என்று அவர்கள் நினைத்தனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற கந்தசாமியை தனது நண்பர் பிரவீன் குமாரை ஏறி காரை ஏற்றி கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

ஆனால் ஒரு வாரம் முன்பாக கந்தசாமி தெரிவித்த செல்போன் வாக்குமூலம் அவர்களை சிக்க வைத்துவிட்டது. இதையடுத்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, ஸ்ரீதர், பிரவீன் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon