மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல பேருந்து வசதி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று பின்னர் வீடுகளுக்கு சென்று விட பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.






