--- --:--:-- --

கோவையில் கோயம்பேடு மார்க்கெட் சென்று பாரம் இறக்கி விட்டு வந்த டிரைவர்கள் உட்பட 38 பேருக்கு கொரோனா ” நெகட்டிவ் ” — கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் பி.சுரேஷ் தகவல் !

20

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம், தென்காசி,தேனி, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 600 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.

 

இதில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றி வந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு சுமை தூக்குவோர்,பாரம் ஏற்றுவோர்,இறக்குவோர் என அங்கு தொடர்புடைய பலரும் சந்தை மூடப்பட்டுள்ளதால் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.சொந்த ஊர்களுக்கு சென்ற பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர்கள் உட்பட 38 பேர் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றது.

 

பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.அதில் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய டிரைவர்கள் உட்பட 38 பேருக்கும் ” நெகட்டிவ் ” ரிசல்ட் வந்துள்ளதாக கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் டிரைவர்கள் உட்பட 38 பேரின் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon