--- --:--:-- --

கொரோனாவுக்கு எதிரான போரில் பாரம்பரிய வைத்திய முறைகள்

13

ஆயுர்வேத மருந்தான அஸ்வகந்தாவை கொரொனா நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன் படுத்துவதற்கான சோதனை முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இந்திய பாரம்பரிய வைத்திய முறைகள் கொரொனாவை தடுப்பதில் இத்தகைய பலன் அளிக்கின்றன என்ற பரிசோதனையை ஆயுஷ் அமைச்சகமும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து ஈடுபட உள்ளன .

 

அஸ்வகந்தா, அதிமதுரம்,சீந்தில் பொடி மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயுஷ் 64 மருந்து கலவை ஆகியவை கொரொனாவை எதிர்க்கும் வல்லமை படைத்தவையாக ஆய்வு செய்யப்படும்.

 

அதிகமாக உள்ள பகுதிகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்களுக்கும் இந்த மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன. ஆயுஷ் மருந்துகளின் பயன்பாடு அதற்கான பலன் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக சஞ்சீவினி என்று செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon