பாபர் மசூதி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்கள் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிபதி எஸ்கே யாதவுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
விசாரணையில் மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து வாக்குமூலங்களையும் வீடியோ மூலம் பதிவு செய்து விசாரணை நிறைவு செய்யும் படி நீதிபதி ரோகன் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது. 28 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் உச்சநீதிமன்றம் மூன்றாவது முறையாக காலக்கெடு விதித்துள்ளது.







