தமிழகத்தை வந்தடைந்த ஒரு லட்சம் பிசிஆர் கிட்டுகள் !!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று வரை மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 600 பேர்.சென்னையில் 399 பேரும்,கடலூரில் 34 பேரும்,திருவள்ளூர் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரானா பரிசோதனைக்கு 52 ஆய்வகங்கள் உள்ளதாகவும்,நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 13,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,கொரோனா தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில் கொரோனா தொற்றை கண்டறிய பயன்படும் ஒரு லட்சம் பிசிஆர் கிட்டுகள் இன்று தமிழகம் வந்தடைந்துள்ளது.தென்கொரியாவில் இருந்து நேரடியாக தமிழக அரசு இந்த பிசிஆர் கிட்டுகளை இறக்குமதி செய்துள்ளது.இதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிய அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள இயலும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இந்த பிசிஆர் கிட்டுகள் பிரித்து அனுப்பப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.







