--- --:--:-- --

பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி மர்ம மரணம்! காரணம் காதலா?

9

ஊரடங்கு விடுமுறையில் பாட்டியின் வீட்டிற்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். போலீஸார் விசாரணையில் தெரியவந்தது என்ன? 17 வயதான மௌனிகா எப்போதும் துறுதுறுவென்று இருப்பவர். நடிப்பில் ஆர்வம் கொண்டவர். இத்துடன் என்னை நீங்கி செல்லாதே என்ற குறும்படத்தில் சமீபத்தில் நடித்துள்ளார்.

 

வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். பிளஸ் டூ முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த மௌனிகா பாட்டி வீட்டின் பின்புறம் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். என்ன நடந்தது மோனிகாவுக்கு? திருவாரூர் அருகே உள்ள மகிழஞ்சேரி சேர்ந்தவர் 45 வயதான செந்தில்குமார். விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மகள் 17 வயது மௌனிகா.

 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியில் உள்ள தனது பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் தான் இரவில் தூங்குவார். வியாழன் இரவு வழக்கம்போல் தனது பாட்டியுடன் உறங்கச் சென்ற மாணவி அதிகாலை வயலுக்கு சென்ற அவர்கள் பாட்டி வீட்டின் பின்புறத்தில் மௌனிகா ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த மக்கள் நன்னிலம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

 

தனது ஊரை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற இளைஞருடன் என்னை நீங்கி செல்லாதே என்ற காதல் தொடர்பான குறும்படத்தில் நடித்துள்ளார். நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த மௌனிகாவின் வாழ்க்கையில் காதலும் இருந்துள்ளது என்கின்றனர் போலீசார்.

 

மேலும் ஒரு ஆய்வின் முதற்கட்ட ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டது போல தெரியவில்லை என்றும் உடலில் விஷம் பாய்ந்ததால் இறந்து இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். மௌனிகா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உடற்கூறு ஆய்வின் முழுமையான அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

Leave a Reply

Right Menu Icon