கொரொனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துவிட்டது!
தமிழகத்தில் நேற்றை மட்டும் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக இருந்த நிலையில் இன்று 5,409 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனாதொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 580 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 316 ஆக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 24 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 பேருக்கும், கூடலூரில் 32 பேருக்கும், பெரம்பலூரில் 33 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 3 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்,கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி. வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 580 ஆக உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில்கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 இலிருந்து 5,409 ஆக அதிகரித்துள்ளது.






