பஞ்சாப்பில் வீடுகளுக்கே சென்று மது வழங்கும் திட்டம்!
பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அங்கு கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரம் அது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால்துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளது.
நபர் ஒருவருக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு 2 லிட்டர் வரை மது விநியோகிக்கப்பட உள்ளது. மதுவை விநியோகிப்பவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.






