விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தரதரவென இழுத்து சென்ற குரங்கு!
இந்தோனேசியாவில் குரங்கு ஒன்று குழந்தையை கடத்தி செல்ல முயன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள சுரபயா நகரில் உள்ள குறுகலான தெருவில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது தெருவுக்குள் நுழைந்து குரங்கு ஒன்று விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தரதரவென இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சப்தமிட அந்த குரங்கு குழந்தையை போட்டுவிட்டு குரங்கு தப்பி சென்றது .இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







