--- --:--:-- --

பாரத் நெட் திட்டத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை!

7

தமிழகத்தில் பாரத் நெட் திட்ட ஒப்பந்த புள்ளிகளுக்கு மத்திய அரசு தடை எதுவும் செய்யவில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்கும் பாரத் நெட் திட்டத்திற்காக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, வலைதளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டப்படி 2021 மார்ச் மாதத்திற்குள் பாரத் நெட் திட்டத்தை நிறைவேற்ற திருத்திய ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு இருப்பதாகவும் இதில் எந்த வரையறை மீறளும் இல்லை என்றும் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்த புள்ளிகள் உள்நாட்டு தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று விளக்கம் தந்துள்ள அமைச்சர் ஆனால் பாரத் நெட் ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

மேலும் ஸ்டாலின் கூறுவதைப் போல தமிழகத்தில் பாரத் நெட் திட்ட ஒப்பந்த புள்ளிகளுக்கு மத்திய அரசு தடை எதுவும் செய்யவில்லை என்றும் விளக்கம் தந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon