சென்னையில் சமூக பரவல் தொடக்கம்…? இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா…!
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில நாட்களாக குழந்தைகளும், சிறுவர்களும் இந்த நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளும், முதியவர்களும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்வதால் சமூக பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இன்று மட்டும் 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.







