--- --:--:-- --

தெலங்கானாவில் சிக்கிய 1,200 தொழிலாளர்கள்! அவர்களுக்காக விடப்பட்ட சிறப்பு ரயில்!

4

பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. கொரொனா பரவலை தடுப்பதற்காகஅமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் சிக்கிக்கொண்டனர்.

 

வருமானம் ஏதும் இல்லாததால் அவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் தெலுங்கானாவில் சிக்கியிருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் ஆயிரத்து 200 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

 

24 பெட்டிகளை கொண்ட ரயில் தெலுங்கானாவின் லிங்கம் பள்ளி என்ற பகுதியிலிருந்து ஜார்கண்ட்டின் ஹதியா பகுதிக்கு இயக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் கோரிக்கை விடுத்ததை அடுத்து ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் புறப்படும் மாநிலமும் சென்றடையும் மாநிலமும் கோரிக்கை விடுத்து அதனை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சேவை தொடர்ந்து வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon