கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசுக்கு எதிராக சர்வதேச அளவில் 102 தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் கொரொனா வைரஸை எதிர்த்து செயல்படும் என உறுதியாக நம்பப்படும் 8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

 

கடந்த 4 நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து நான்கு தடுப்பூசிகள் பெறப்பட்டதாக தெரிவித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு அவற்றைச் சீனா மனித பரிசோதனைக்கு உட்படுத்தியதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

 

மனிதர்கள் மீதான மருத்துவ பரிசோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட 8 தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் சீனாவில் இருந்து பெறப்பட்டவை. ஒன்று பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. மற்ற இரண்டு தடுப்பூசிகள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய குழுக்களாலும் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply