--- --:--:-- --

ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை அமைச்சர்கள் கூட்டம்! பொது முடக்கம் நீட்டிப்பா?

5

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கட்ட பொது முடக்கம் நாளை மறுநாள் உடன் முடியும் சூழலில் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பொது முடக்கம் நீட்டிக்கலாமா என்பது குறித்தும் அவ்வாறு நீட்டித்தால் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து ஆகிய அம்சங்களை மட்டும் தளர்வுகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதற்கிடையில் பொது முடக்கத்தில் இருந்து மீளும் உத்திகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon