--- --:--:-- --

நிரவ் மோடி மோசடி வழக்கின் இறுதி விசாரணை 11 ந் தேதி தொடக்கம்

6

வங்கி மோசடி வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரும் வழக்கின் இறுதி விசாரணை வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

 

அடுத்தடுத்து ஐந்து முறை நிரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை நாடு கடத்த கோரி இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை வருகிற 11-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்களை நான்காம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon