--- --:--:-- --

மருத்துவமனையின் அலட்சியத்தால் கொரொனா பாதித்தவர் உயிரிழப்பு!

12

மேற்கு வங்கத்தில் முதியவர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் வந்த நிலையில் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

 

ஓம்பிரகாஷ் என்று அந்த முதியவர் அரசு மருத்துவமனையில் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டபோது கொரொனா தொற்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு நான்கு நாட்கள் கழித்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உறவினர்கள் உதவியுடன் அவரை அழைத்து வந்த நிலையில் 24 மணி நேரத்தில் மீண்டும் கொரொனா இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

ஆம்புலன்சில் செல்லும் முன்புவீடியோ காலில் தந்தையுடன் வீடியோ கால் பேசியதை பதிவு செய்துள்ள மகன் கொரொனா உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்றும் இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon