ஊரடங்கு காலத்தில் லீவ் கொடுத்தால் வீட்டில் இருங்க…சுழற்சி முறையில் பணியாற்றும் காவல் துறையினருக்கு ” அட்வைஸ் ” கொடுக்கும் குறும்படம் வெளியீடு. கருமத்தம்பட்டி காவல் துறை அசத்தல் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியாவும் தப்பவில்லை.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை – 52. மொத்த பாதிப்பு 1937 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மேலும் 47 பேர் உட்பட பாதிப்பு எண்ணிக்கை 570 ஆகவும் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 81 ஆகும்.இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.மருத்துவம்,காவல் துறையினர்,தூய்மைப்பணியாளர்கள் தன்னுயிரினையும் பொருட்படுத்தாமல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்துறையுனரின் தன்னலமற்ற,சீரிய பணியினால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வின்றி உழைத்து வரும் காவல் துறையினருக்கு ஊரடங்கு காலத்தில் தங்களையும்,தங்களது குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளும் பொருட்டு ” காரண்டைன் லீவ் ” உயரதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் காவல் துறையினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காவலர்கள் பணிபுரிந்த போத்தனூர்,குனியமுத்தூர் காவல் காவல் நிலையங்களும் ” சீல் ” வைக்கப்பட்டு தற்காலிகமாக வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.பாலமுருகன் தலைமையில் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் தங்களையும்,தங்களது குடும்பத்தினரையும் காக்கும் வகையில் ” காரண்டைன் லீவில் ” வீட்டில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறும்படம் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார்.இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் ” காரண்டைன் லீவில் ” வீட்டில் இருக்க வேண்டும் என ” அட்வைஸ் செய்வது போல் படத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் ” காரண்டைன் லீவில் ” தங்களையும்,தங்களது குடும்பத்தினரையும் காக்க வீட்டில் இருக்க வேண்டும் என ” அட்வைஸ் ” கூறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படம் தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.







