குணமடைந்த லக்னோ மருத்துவர் பிளாஸ்மா தானம்!
கொரொனாவில் இருந்து குணமடைந்த மருத்துவர் ஒருவர் தமது பிளாஸ்மாவை தானமாக கொடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். மருத்துவ பல்கலைக்கழக தொற்று நோய்ப் பிரிவில் பணியாற்றும் டாக்டர் தௌசிஃப் கான் உத்திரப்பிரதேசத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது மருத்துவர் ஆவார். கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இவருக்கும் தொற்று பரவியது.
21 நாட்கள் தனிமை வார்டிலும் அதனை தொடர்ந்து 14 நாட்கள் வீட்டு தனிமையிலும் இருந்த பின்னர் தொற்று குணமான நிலையில் தான் பணியாற்றும் அதே மருத்துவமனைக்கு வந்து அவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். மிக எளிதான தானம் செய்யலாம் என்பதுடன் தீவிர கட்டத்தில் இருக்கும் பலரை காப்பாற்ற இது உதவும் என்பதால் குணமடைந்த நோயாகள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.







