கேரளாவில் கொரொனா பரவலை கட்டுபடுத்த குடை பிடிக்கும் மக்கள்!
கேரளாவில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க குடை பிடிக்க வேண்டுமென்ற நூதன வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர் முக்கம் என்று கிராம பஞ்சாயத்தில் இதனை நடைமுறைப்படுத்திய அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரிடமும் கையில் கட்டாயம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
இவ்வாறு குடையுடன் மக்கள் வெளியே நடமாடும் போது ஒருவருக்கும், மற்றொருவருக்கும் இடையே கண்டிப்பாக ஒரு மீட்டர் இடைவெளி உருவாகும். இதன் மூலம் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து மிரட்டும் கொரொனாவை விரட்ட முடியும் என கேரள அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.







