ஊரடங்கு உத்தரவை மீறி கறிவிருந்து நடத்தியதால் கைது!
சேலம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கறிவிருந்து நடத்தியதால் கைது செய்யப்பட்ட பல நபர்களும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வீராணம் பள்ளிப்பட்டு பகுதியில் பாக்கு தோப்பு ஒன்றில் சமூக இடைவெளியின்றி கறி விருந்து நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்த 10 நபர்களையும் வீராணம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் இன்று காலை கைது செய்தனர். உடனே மதித்து நடக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

நாகப்பட்டினத்தில் நள்ளிரவில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாகை கநாடா தெருவை சேர்ந்த 11 இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள திடலில் இரவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து மடக்கிய போலீசார் இனி சட்டத்தை மீறி நடக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பினார்.







