மனைவி இறந்தை கூட அறியாமல் பராமரித்து வந்த கணவர்!
மதுரை திருமங்கலத்தில் மனைவி இறந்து இரண்டு நாட்கள் ஆனது கூட அறியாமல் கணவன் அவரை பராமரித்து வந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. பாண்டி, ஆண்டாள் தம்பதியினர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர்களது பிள்ளைகள் நான்கு பேரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சமயத்தில் உணவிற்காக இருவரும் சிரமப்பட இதையடுத்து அவரது மகன் அரசு அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெற்றோருக்கு உணவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் பெயரில் அப்பகுதி விஏஓ அவர்களுக்கு உணவளிக்க சென்றபோது ஆண்டாள் இறந்து கிடப்பதை கண்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் பாண்டியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார்.







