கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை கர்நாடகாவில் தொடக்கம்!
கர்நாடகாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா மூலம் சிகிச்சை தொடங்கியுள்ளது. கொரொனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து தொற்றுக்கு ஆளான மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். ஏற்கனவே டெல்லியில் பிளாஸ்மா முறையில் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரொனாவில் இருந்து குணமடைந்த ஏராளமானோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடங்கியது.







