--- --:--:-- --

வீட்டிலிருந்தே கொரொனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்!

2

கொரொனா தடுப்பில் மைல் கல்லாக வீடுகளில் இருந்தவாரே பரிசோதனை செய்து கொள்ளும் கிட்களுக்கு அமெரிக்காவில் எஃப்‌டி‌ஐ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் பரவலாக மருத்துவ ஆய்வகங்களை வைத்துள்ள லேப் காப் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கிட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் 9,000 ரூபாய் ஆகும்.

 

வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் எஃப்‌டி‌ஐ ஆணையாளர் ஸ்டீபன் இதை தெரிவித்தார். இந்த கிட் வாயிலாக சம்பந்தப்பட்ட நபர் சுயமாகவே சளி தொண்டை மற்றும் மூக்கு சுவாபி எடுத்து அதன் விபரங்களை அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களுக்கு இமெயில் செய்ய வேண்டும். அதன் பின்னர் சோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபருக்கு இமெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Right Menu Icon