--- --:--:-- --

62 வயது மூதாட்டிக்கு 19 முறை பாசிடிவ்…20 ஆவது முறையில் நெகட்டிவ்

3

கேரளாவில் தொடர்ந்து 19 முறை கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட மூதாட்டிக்கு இருபதாவது சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனை யடுத்து 45 நாட்கள் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்ப உள்ளார். பத்தினம்திட்டாவை சேர்ந்த 62 வயது மூதாட்டி கொரொனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவ்வப்போது பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 19 சோதனைகளிலும் அவருக்கு பாசிட்டிவ் என்று முடிவு கிடைத்தது. இது மருத்துவர் சமூகத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மூதாட்டிக்கு 20 மற்றும் 21 ஆவது முறை நடத்தப்பட்ட சோதனைகளில் இருமுறையும் நெகட்டிவ் என வந்திருப்பதாகவும் எனவே அவர் வீட்டிற்கு அனுப்ப படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இருதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருந்து வந்தது. இதற்கென கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

 

இதனையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து ஏற்படுத்திய போதிலும் பலனில்லாமல் அந்த பிஞ்சு நேற்று காலை குழந்தையின் உயிர் பிரிந்தது. கேரளாவில் கொரொனா கட்டுப்படுத்த பட்டிருக்கும் நிலையில் பிஞ்சு குழந்தை இறந்தது அந்த மாநில மருத்துவ துறையில் நுழையும் பொது மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon