ஏழை, எளிய மக்களுக்கு 100 டன் அரிசி வழங்கும் பெரம்பலூர் எம்பி. பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 டன் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமது சொந்த செலவில் 100 டன் அரிசியை பாரிவேந்தர் வழங்க முடிவு செய்தார்.
இத்திட்டத்தை பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் ஜெயசீலன் தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைப்போல லால்குடி அருகே ஊராட்சியில் உள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என 300 பேருக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அரிசி, காய்கறிகள், முகக் கவசங்கள் ஆகியவற்றை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் கட்சியின் உயர்மட்ட குழு செயலாளர் சத்தியநாதன், மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர்.
இதை தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிற பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வழங்கப்பட உள்ளது.






