--- --:--:-- --

வெளிநாட்டு கைதிகளுக்கு கொரோனா…வதந்தி கிளப்பிய தலைமை காவலர்!

8

புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு கொரொனா பாதிப்பு என வதந்தி பரப்பியதாக தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புழல் மத்திய சிறையில் முதல் தலைமை காவலவராக இருப்பவர் சரவணகுமார். இவர் வெளிநாட்டு கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்.

 

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் விடுப்பு எடுத்த அவர் மறுநாள் பணிக்கு திரும்பியபோது வெளிநாட்டு கைதிகள் அறையில் பணிக்கு செல்ல முடியாது எனவும் அவர்களுக்கு கொரொனா பாதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தேவையின்றி வதந்தி பரப்பியதாக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்திருக்கும் சிறைத்துறை புழல் சிறையில் கைதிகள் யாருக்கும் கொரொனா தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் தனிப்படை போலீசாரை சுத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

 

அப்போது அஜீத் என்பவன் காவலன் ஒருவனை கத்தியால் கீறியும், மற்றொருவரை கடித்தும் காயப்படுத்திய போது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon