2 நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்…காரணம் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவை கண்டறிய அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் ராபிட் கிட் மூலமாக நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் 6 லிருந்து 71 விழுக்காடு வரை மாறுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அதையடுத்து ராஜஸ்தான், குஜராத்திற்கு அனுப்பப்பட்ட ராபிட் கிட் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ரேபிட் கிட்களை பரிசோதிக்க பயன்படுத்த தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனாவை கண்டறிவதற்கு மீண்டும் ராபிட் கிட்களை பயன்படுத்துவது தொடர்பாக மறு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொரொனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் என்கின்றனர்.

 

இது குறித்து ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் ஒரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ் பி வேலுமணி பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


Leave a Reply