சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு ” கொரோனா ” எதிரொலி.கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை !!!
சென்னையில் 5 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார்.இதனையடுத்து பத்திரிக்கையாளர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர்.
முன்னதாக முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,சோதனை குறித்து சுகாதார துறையினரிடம் கேட்டறிந்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும்,இன்று கணிசமான நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,கோவை மாநகரில் 10 பகுதிகளும், மாவட்டத்தில் 8 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும்,அந்த பகுதியில் உள்ளவர்கள் அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு வரும் வகையில் மருத்துவ பணியாளர்கள் ஆய்வில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மேலும்,கோவையில் யார் மூலமும் தொற்று இல்லை என்பதை உறுதி படுத்தும் வகையில் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர் கோவை மாவட்டத்திற்கு 2000 ரேபிட் கிட் வந்துள்ளது.அதில் 1000 பயன்படுத்தியுள்ளோம்.மேலும் கூடுதலாக 1200 கிட் வர உள்ளது.புதிய ரேபிட் கிட் மூலம் சோதனையிட்டதில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பேசினார்.

மேலும்,இன்று கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது.நாளை ஆட்சியரக பணியாளர்களுக்கு நடத்தப்படும் எனவும், மேலும் எங்கெல்லாம் தேவை உள்ளதோ அங்கெல்லாம் ரேபிட் கிட் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக அங்குள்ள பிரசவ வார்டு சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் எனவும்,பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரை தவிர மற்றவர்களுக்கு பயண வரலாறு உள்ளது எனவும் தெரிவித்தார்.






