கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்த கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 33 பேர் கோவையில் ” டிஸ்சார்ஜ் “.கோவை கலெக்டர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா பழக்கூடை வழங்கியும்,கைகளை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!.

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்தள்ளது.கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் நேற்று 2 பேர் பலியான நிலையில், உயிரிழப்பும் 17 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா பாதிக்கப்பட்ட 43 பேரில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் இன்று முதன் முறையாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றார். இந்த நிலையில் கோவையில் கொரோனா தொற்று ஏதும் ஏற்படாத காரணத்தால் 133 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும்,இதுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 54 கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து 54 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 33 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 3 குழந்தைகள்,10 பெண்கள் உட்பட 33 பேர் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டனர்.கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா ,ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களை பழக்கூடைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.மேலும்,குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா,மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உற்சாகமூட்டும் வகையில் கைகளை தட்டி வழியனுப்பி வைத்தனர்.

 

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவையில் இதுவரை 84 பேர் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்போடு மட்டுமே சாத்தியமானதாகவும்,அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும்,ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் 4 ஆயிரம் பேரை சோதனை செய்ததில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,தற்போது புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 1000 பேருக்கு சோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,50 பேர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் உள்ளனர்.அவர்களும் விரைவில் குணமடைந்து விரைவில் ” டிஸ்சார்ஜ் ” செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும்,100 சதவிகித கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாவட்டமாக இருப்பதற்கு மக்கள் முழுமையாக அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply