--- --:--:-- --

ஐதராபாத்திலிருந்து நாக்பூர் வரை 3 மாத குழந்தையுடன் 10 நாட்கள் நடந்தே சென்ற தாய்

4

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் மகாராஷ்டிராவில் 10 நாட்கள் நடந்தே சென்ற அவலம் ஏற்பட்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நாடெங்கும் மக்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.

 

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து பத்து நாட்களுக்கு முன் நடக்க தொடங்கிய கூலித் தொழிலாளிகள் நாக்பூரை சென்றடைந்துள்ளனர் .அவர்களில் மூன்று மாத குழந்தையுடன் தாய் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று இருப்பது காண்போர் மனதை கலங்க வைத்துள்ளது.

 

கொரொனாவுக்கு சிகிச்சை பெறும் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான தொகையை வழங்குவது தொடர்பாக இரண்டு மணி நேரத்தில் பரிசீலனை செய்து முடிக்க காப்பீடு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காப்பீடு தாரர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்போது காப்பீடு நிறுவனங்களின் வேலை நேரத்தில் மட்டுமே இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

 

அதிலும் மூன்றாம் நபர் தரக நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து மருத்துவ விபரங்களை சரிபார்த்து காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்கும். அதன்பிறகு காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையை மருத்துவமனைக்கு செலுத்தும்.

 

இதற்கு சில நாட்கள் ஆகி வரும் நிலையில் கொரொனா சிகிச்சை பெறும் காப்பீடு தாரர்களின் விண்ணப்பங்களை நேரமின்றி 24 மணி நேரமும் பரிசீலித்து இழப்பீட்டை இரண்டு மணி நேரத்தில் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் காப்பீடு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon