இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் கொரொனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரொனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 24 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரொனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் அதற்கு அடுத்தபடியாக கொரொனா தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. இங்கிலாந்தில் 5,760 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







