--- --:--:-- --

உணவகங்கள், ஸ்டார் ஓட்டல்களுக்கு அனுமதி ஏன்..? ஊரடங்கை ரொம்ப தளர்த்தக் கூடாது..! கேரளாவுக்கு மத்திய அரசு கண்டிப்பு!!

10

கேரளாவில் ஊரடங்கில் பெரும் பகுதி தளர்த்தப்பட்டு போக்குவரத்து, உணவகங்கள்,  நட்சத்திர விடுதிகள் போன்றவை செயல்படவும் அமைதி அளித்ததற்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. கேரளாவின் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்து விடும் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு செய்யலாம் என அறிவித்த மத்திய அரசு, எந்தெந்த துறைகளுக்கு அனுமதி வழங்கலாம் என சில வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

 

ஆனால், கேரள மாநிலத்திலோ பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கில் முழு தளர்வு போல அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏனெனிக் கேரளாவில், கடந்த சில நாட்களாக கெரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு என்ற அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மலப்புரம், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், முடி திருத்தும் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்தும் தாராளமாக்கப்பட்டதுடன், பொதுமக்களின் வாகனங்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

கேரள அரசின் இந்த செயலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவிப்பது போல், கண்டிப்பு காட்டி கடிதம் ஒன்றை அவசரமாக எழுதியுள்ளது. அதில் உணவகங்கள், பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி, கேரள அரசின் நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து விடுவதாக அமைந்துள்ளது என மத்திய அரசு கண்டித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon