--- --:--:-- --

கொரொனாவை டீ கட்டுபடுத்துமா? ஆராய்ச்சி முடிவு சொல்வது என்ன?

9

கொரொனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றன. தேயிலையில் உள்ள தேஆப் பிளேவின் என்ற சத்து ஆன்டி-வைரல் தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவானில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கமான உபாசி தெரிவித்துள்ளது.

 

இதன் அடிப்படையில் கருப்பு மற்றும் க்ரீம் தேயிலையில் உள்ள தேஆப் பிளேவின் சத்துக்கள் கொரொனா மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா என்ற ஆராய்ச்சி நடப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர்களை flipkart’ ஏற்கத் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் விற்க தடை நீடிக்கும் என அரசு கூறியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் வழக்கமான விற்பனை மே மூன்றாம் தேதிக்கு மேல்தான் தொடங்கும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon