ஊரடங்கால் விவசாயம் செய்ய இறங்கியுள்ள நடிகை கீர்த்தி பாண்டியன்!
ஊரடங்கு காரணமாக திரைத்துறை முடங்கி கிடப்பதால் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் விவசாயத்தில் கால் பதித்துள்ளார். தும்பா என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
விவசாயப் பணியை துவக்கி விட்டதாக தெரிவித்துள்ள கீர்த்தி பாண்டியன் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு விதிகள் அனைத்தையும் தான் கடைபிடித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளார். நடிகை கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் 80களில் கதாநாயகனாக நடித்த அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உரங்கள் விற்பனை செய்ய முடியாமல் கால்நடைகளுக்கு மலர்களை உணவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி தாலுகா நல்லூர் சிங்காநல்லூர் ஆணை கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மாற்று சாகுபடி ஆக பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இன்றியும் கடைகள் மூடப்பட்டாலும் இப்பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த மல்லிகை, செவ்வந்தி மற்றும் சாமந்தி பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அனைத்து மலர்களும் செடியிலேயே கருகி வருகின்றன.
பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு மன வேதனை அடைந்த விவசாயிகள் சாகுபடி செய்த மலர்களை தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.







